ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண்!!

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கும் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் போது, கல்வி மற்றும் கலாச்சார விவகார பணியகத்தில் கல்வித் திட்டங்களுக்கான துணை உதவி செயலாளராக மாலா அடிகா பணியாற்றி உள்ளார். உலகளாவிய மகளிர் பிரச்சினைகள் தொடர்பான மாநில அலுவலகத்தின் செயலாளராகவும், தூதரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றினார்.

அதோடு மாலா அடிகா, ஜில் பைடனின் மூத்த ஆலோசகராகவும், ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் பிரச்சாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். முன்னதாக, ஜோ பைடனின் அறக்கட்டளையில் உயர் கல்வி மற்றும் ராணுவ குடும்பங்களுக்கான இயக்குநராகவும் மாலா அடிகா இருந்துள்ளார்.

2008 இல் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பிரச்சாரத்தில் சேருவதற்கு முன்பு சிகாகோ சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் ஒபாமா நிர்வாகத்தில் இணை அட்டர்னி ஜெனரலுக்கான ஆலோசனையாளர் ஆனார்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x