“இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளிமாவட்ட நபர்கள் வர தடை!” காவல்துறை எச்சரிக்கை!!

இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளிமாவட்ட நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரில் பிரதான சாலைகள் மூடப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரை பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், போரூர். மணலி, ஈசிஆர், ஓம்ஆர் போன்ற பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிக்கபட்டு உள்ளதால் சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளிமாவட்ட நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x