“மகனுக்கு தந்தை கூறிய அறிவுரையை போன்றது” ; தேசியவாத காங்கிரஸ் விளக்கம்..

‘காங்கிரஸ் எம்.பி. ராகுல் பற்றி சரத் பவார் விமர்சித்தது, மகனுக்கு தந்தை கூறிய அறிவுரையை போன்றது’ என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், தேசியவாத காங். தலைவர் சரத் பவார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘தேசத்தை வழி நடத்தும் தலைவராக மாறுவதில் ராகுலுக்கு பக்குவம் போதவில்லை’ என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் ‘எங்கள் கட்சி தலைமை பற்றி விமர்சிப்பதை கூட்டணி கட்சிகள் நிறுத்த வேண்டும். இல்லாவிடில் மஹாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நிலைக்காது’ என காட்டமாக கூறியது.
இத்நிலையில் தேசியவாத காங். செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறியதாவது: ராகுலை பற்றி சரத் பவார் கூறியவை மகனுக்கு தந்தை கூறிய அறிவுரையாக தான் பார்க்க வேண்டும். ஏனெனில் அவர் காங்கிரசை விமர்சிக்கவில்லை. மேலும் ராகுல் பற்றி அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு சரத் பவார் கடும் கண்டனம் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.