தங்கம் விலை மீண்டும் குறைவு…!

கொரோனா பரவலின் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தடுமாற்றத்துடனே இருந்து வருகிறது. நேற்று மாலை சற்று அதிகரித்த தங்கம் விலை இன்று ரூ.24 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,677க்கு விற்கப்பட்டுவருகிறது. சவரன் ரூ.24 குறைந்து ரூ.37,416க்கு விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 30 காசுகள் அதிகரித்து ரூ.70.70க்கு விற்கப்பட்டு வருகிறது.