ஆட்டுக்கு பணம் கேட்ட வியாபாரி கழுத்தறுத்துக் கொலை

அரியலூர் அருகே கறி ஆடுகள் விற்பனை செய்யும் நபரை அவரிடம் ஆடுகள் வாங்கும் நபர் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
அரியலூர் மேலவண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (40). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் பண்டிகை நாட்களில் ஆடுகளை வாங்கி இறைச்சிக்காக விற்பனை செய்வார்.
கடந்த தீபாவளி பண்டிகையின்போது இதேபோன்று ஆடுகளை வாங்கியுள்ளார். அதற்கு இதுவரை பணம் தரவில்லை. இந்த நிலையில் பொங்கலுக்கும் அவரிடம் ஆடுகளை கடனாகக் கேட்டுள்ளார். இதனால் பழனிச்சாமி அவரை திட்டி அனுப்பி உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பழனிவேல், பழனிச்சாமியிடம் நைசாக பேசி மது அருந்த அழைத்துள்ளார். அவருக்கு மது ஊற்றி தந்து போதை தலைக்கு ஏறியதும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பழனிச்சாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தப்பி ஓடிய அவரை கீழப்பழுவூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.