“தேர்தலில் மாற்றம் தேவை” – எம்.பி., தயாநிதி

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தி.மு.க., எம்.பி., தயாநிதி மாறன் பிரசாரம் மேற்கொண்டார். பொது மக்களுடன் சந்திப்பு நடத்தினார்.
இனாம்கிளியூர் பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் அ.தி.மு.க., மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. முதல்வர் பழனிசாமி, சசிகலாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அனைவருக்கும் துரோகம் செய்தவர். இந்த தேர்தலில் நிச்சயம் மாற்றம் தேவை.
இவ்வாறு, அவர் பேசினார்.