புதுச்சேரியில் ரேஷன் அரிசிக்கு பதில் ரூ.3000 பணம்…!

புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரார்களுக்கு 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் அரிசிக்கு பதிலாக ரூ.3000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இதற்க ரூ. 52.84 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரியில் உள்ள சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஐந்து மாதத்திற்கான அரிசிக்கு ஈடான அட்டை ஒன்றுக்கு ரூ. 3,000 வழங்க ரூ. 52.84 கோடிக்கு ஒப்புதல் அளித்து, கோப்பினை கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ளார்.
விரைவில் இதற்கான அரசாணை வெளியிட்டு, அனைத்து சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் வங்கி கணக்கில் ரூ.3,000 செலுத்தப்படும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 134 சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.