‘சென்னையில் கொரோனா குறைஞ்சிடுச்சி..’ – மகிழ்ச்சி தகவல்

சென்னையில் கொரோனாத் தொற்று குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, சுய கட்டுப்பாடு ஆகியவற்றை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.
சென்னையில் கொரோனாத் தொற்று உறுதி செய்வோர் எண்ணிக்கை 37 சதவிகிதம் வரை இருந்தது. அது தற்போது 12 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களாக கொரோனா குறைந்து வருகிறது. மீண்டும் உயர்ந்துவிடாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ” என்றார்.