“எஸ்.வி,சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்……….?” அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!!!

தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக துவங்கி, பின் நடிகராகி, அதன் பின் 2006ம் ஆண்டு அதிமுக கட்சியில் இணைந்து, அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மயிலாப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.வி.சேகர்.

2009 ல் அந்த கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன் பின்பு தற்போது பாஜகவில் சேர்ந்து உறுப்பினராக உள்ளார்.

அடிக்கடி சர்சைக்களில் சிக்கிக் கொள்ளும் எஸ்.வி சேகர் சமீபத்தில் அதிமுக கொடியிலிருந்து பேரறிஞர் அண்ணாவின் படத்தை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே கன்னியாகுமரியில் அண்ணாவின் சிலை மீது காவிக்கொடி வீசப்பட்டது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் எஸ்.வி. சேகரின் கருத்து பெரிய விவாதமானது.

இந்நிலையில் எஸ்.வி. சேகரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “எஸ்.வி,சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக எம்.எல்.ஏ வாக அவர் ஐந்தாண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்சனை திருப்பித் தரவேண்டும் எஸ் வி சேகர் தருவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x