பொருளாதார வளர்ச்சி முன்பை விட குறையும்: சொல்கிறது ஆர்.பி.ஐ.,

வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும். இதனால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்திலும் மாற்றமிருக்காது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.3 சதவீதமாகவே தொடரும். மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டெழத் தொடங்கியுள்ளது. இந்திய பொருளாதாரம் ஏப்ரல் – மே மாதம் முதல் உயர தொடங்கியுள்ளது.
2020 – 2021-ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்பை விட குறையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. நாட்டில் போதியளவு பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் உறுதி செய்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.