‘வழக்கு போட்டால் ஓடி ஒளிந்து கொள்வார் எஸ்.வி. சேகர்…’ காமெடி நடிகரை கிண்டலடித்த முதல்வர் பழனிச்சாமி

எஸ்.வி. சேகர் பேசியது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து என்ன என்ற பத்திரிகை நிரூபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதையாவது பேசிவிட்டு, வழக்கு என்று வந்தால், ஓடி ஒளிந்து கொள்பவர் தான் எஸ்.வி. சேகர் என்றும், அவரை பற்றி என்னத்த சொல்ல என்றும் கிண்டலாக பேசிவிட்டு அந்த கேள்வியை கடந்துள்ளார்.
அண்ணா திமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்கிடுங்க என எஸ்.வி.சேகர் பேசிய வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை கிளறி உள்ளது.
ஜெயலலிதாவின் ஆதரவால் தான் நீங்க கட்சிக்கு வந்தீங்க என எஸ்.வி. சேகர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயக்குமார் பேச, அதற்கு பதிலடியாக ”நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை. சசிகலாவை சந்தித்தது இல்லை. நான் விசுவாசியல்ல. நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத் தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். MGR JJ படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா என்றும்,

என் MLA சம்பளம், என் ஓயூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல. என் சம்பளம் தவிர ஒரு பைசா கூட கமிஷனாக சம்பாதிக்காதவன் நான். அப்படி எத்தனை விசுவாசிகள் சொல்வீர்கள்! யோசியுங்கள். புரியும். இல்லை அம்மாவின் ஆத்மா புரியவைக்கும். “மான ரோஷம்” நல்ல காமெடி என செம பதிலடி கொடுத்திருந்தார்.
இப்படி எஸ்.வி. சேகர் ரிவீட் அடித்துள்ள நிலையில், சாதாரணமாக பேசிவிட்டு, இதில் இருந்து தப்பித்துக் கொள்ளவே முதல்வர் எடப்பாடி பழனி சாமி செல்கிறார் என்றே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஜெயக்குமாருக்கு அப்படியொரு பதிலடி கொடுத்த எஸ்.வி. சேகர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓடி ஒளிந்து கொள்பவர் தானே நீங்கள் என்று வைத்துள்ள விமர்சனத்துக்கு என்ன பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.