ரூ.5000 நிவாரணம்… தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பலரும் பொருளாதார சிக்கலால் தவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு ஏழைகளையும், நடுத்தர மக்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 ஆயிரத்தை நிவாரணமாக வழங்க வேண்டுமென்று பேரிடர்கால  நிவாரணப் பணிகளில் முன்னணி வகிக்கும் அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதேசமயம், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழை கூலி தொழிலாளர்கள் அடித்தட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

தமிழக அரசு, வழங்கிய 1000 ரூபாய் நிவாரணம் எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது.  குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5000 உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x