இனி ஏர் இந்தியாவில் இவர்களுக்கு பாதிக் கட்டணம் தான்!

ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உள்ளூர் விமான கட்டணத்தில் 50% சலுகையை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் விமானக் கட்டணத்தில் Base Fare எனப்படும் அடிப்படைக் கட்டணத்தில் 50% சலுகையை பெறலாம். மூத்த பயணிகள் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். 

முன்பதிவு செய்யும் போது, பிறந்த ஆண்டுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா வழங்கிய மூத்த குடிமக்கள் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.

இதேபோல் பயணத்தின் போதும் குறித்த அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். இல்லையெனில் டிக்கெட்டிற்கு முழுக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த டிக்கெட்டுக்களை ரத்து செய்தால் கட்டணம் திருப்ப வழங்கப்படாது, வரி மற்றும் இதர கட்டணங்கள் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்படும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x