அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுபாடு… உலகிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!!!

இந்தியாவின் பெருநகரங்களான கொல்கத்தா, மும்பை, கோழிக்கோடு உள்ளிட்ட 30 பெருநகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கனவே உலகின் பல நகரங்கள் பாதித்துள்ள நிலையில், சர்வதேச இயற்கை நிதியம் நடத்திய ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, 2050 ஆம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் 100 முக்கிய உலக பெருநகரங்களில் தற்போது 35 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.
உலகளவில், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளின் மக்கள் தொகையானது 2020ல் 17 சதவீதத்திலிருந்து 2050க்குள் 51 சதவீதமாக உயரக்கூடும்.
இதில், இந்திய நகரங்களான ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், புனே, ஸ்ரீநகர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 30 நகரங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளன என ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.