“செப்டம்பர் மாதத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து நாளை ஆலோசிக்கப்படும்” – தமிழக முதல்வர்!

தமிழகத்தில் ஊரடங்கு தொடர்வது குறித்தும், இ-பாஸ் நடைமுறை குறித்தும் நாளை (ஆகஸ்ட் 29) ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தகவல்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மே மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளில் ஏகப்பட்ட தளர்வுகளை மத்திய மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடைகள், ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவே கருதப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் இன்னும் ஊரடங்கு, இ-பாஸ் ஆகியவை தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் அடுத்து என்னவென்பது தெரிவில்லை. எனவே, தமிழக முதல்வர்  தலைமையில் நாளை (ஆகஸ்ட்  29) மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறும். இதன் பின்னர் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இ-பா ரத்து செய்யப்படுமா அல்லது அமலில் இருக்குமா என்பது குறித்து அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x