“வேல் யாத்திரையை கைவிடுவதுதான் பா.ஜ. கட்சிக்கு நல்லது” – அமைச்சர் ஜெயக்குமார்

வேல் யாத்திரை மூலம் மக்களுக்கு கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும். கொரோனா பரவாமல் தடுப்பது அரசாங்கத்தின் தலையாய கடமை. அந்த கடமையை உணர்ந்துதான் இந்த நேரத்தில் தேவையில்லை என்பதை வலியுறுத்தியுள்ளோம். அதை அவர்கள் உணர்ந்து வேல் யாத்திரையை கைவிடுவதுதான் அவர்கள் கட்சிக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.
எல்லோரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்தான். யாராக இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”எனத் தெரிவித்தார்.