கொரோனாவுக்கு பயந்து இந்தியா வந்த பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்!!!

உத்தரபிரதேசம் கவுதம்புத்நகர் மாவட்டம் தாத்ரி என்ற பகுதியை சேர்ந்தவர் சுதிக்ஷா (20). ரூ.4 கோடி உதவித் தொகையுடன் அமெரிக்காவிலுள்ள பாப்சன் காலேஜில் படித்து வருகிறார். இப்போது கொரோனா காலம் என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று இவர் தன்னுடைய மாமா சத்யேந்தருடன் புலந்த்ஷெரில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென விபத்து ஏற்பட்டு, பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டார் சுதிக்ஷா. இதில் தலை குப்புற தரையில் பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திர்லேயே அவர் இறந்து விட்டார். இந்த விபத்து தற்போது பாலியல் துன்புறுத்தல் சம்பவமாக வெடித்துள்ளது.

இதற்கு காரணம் பைக்கில் சுதிக்ஷா சென்றபோது புல்லட்டில் 2 இளைஞர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது சுதிக்ஷாவை அசிங்கமாக பேசி கேலி செய்துள்ளனர். ஆனால் அவர்களை பற்றி கண்டுக்கொள்ளாமல் சுதிக்ஷா இருந்திருக்கிறார். திரும்பி கூட பார்க்கவில்லை. இதனால் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த 2 இளைஞர்களும் புல்லட்டிலேயே சாகசம் காட்டி இருக்கிறார்கள். பிறகு அருகில் வந்து மிரட்டியும் இருக்கிறார்கள். இதனாலேயே அந்த கவனம் சிதறி விபத்து ஏற்பட்டு உயிர் காவு வாங்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து புலந்த்ஷெர் நகர போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். சம்பவம் குறித்து சொல்லும் போது, “பைக்கில் சுதிக்ஷா சென்று கொண்டிருந்திருக்கிறார். பின்னால் வந்த புல்லட் மோதி இறந்து விட்டார். அவரது சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பெற்றோர், பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக சொல்கிறார்கள். எங்களுக்கு அதை பற்றி ஒரு புகாரும் இதுவரை வரவில்லை” என்றனர்.
கொரோனாவிற்கு பயந்து சொந்த ஊர் திரும்பிய பெண்ணின் உயிர், பாலியல் துன்புறுத்தல் காரணாமாக பறிபோனது அந்நகர மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.