நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! ஒழுங்கு மீறிய மகனுக்கு அபராதம் விதித்த தந்தை!

பாகிஸ்தான் – இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இத்தொடரில் மொத்தம் 3 போட்டிகள். அவற்றில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. ஆனால், இறுதிவரை பாகிஸ்தான் அணியே வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் மேட்சில் திருப்பம் ஏற்பட்டு இங்கிலாந்து அணி வெற்றியைச் சுவைத்தது

இந்த வெற்றியின் மூலம், 1-0 எனும் கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாம் போட்டி நாளை (ஆகஸ்ட் 13) தொடங்க உள்ள நிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சொந்தக் காரணங்களால் அணியிலிருந்து விலகியிருக்கிறார். முதல் போட்டியில் சரியாக விளையாடிய ஸ்டோக்ஸ் அடுத்த போட்டியில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவே.

முதல் போட்டியின் போது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட் எடுத்து சாதனை படைத்த ஸ்டுவர்ட் பிராட், பாகிஸ்தானின் பேட்ஸ்மேன் யாசிர் ஷா விக்கெட் எடுத்ததும் அதைக் கொண்டாடும் விதமாக அவர் நடந்துகொண்டது ஒழுக்க விதிகளுக்கு எதிராக இருந்தது. அதனால், அந்தப் போட்டியின் நடுவர் கிறிஸ்ட் பிராட், ஸ்டுவர்ட் பிராட்க்கு 15 சதவிகித சம்பளத்தை அபராதமாக விதித்தார்.

இதில் என்ன விநோதம் எனில், ஸ்டூவர்ட் பிராட்டின் அப்பாதான் கிறிஸ்ட் பிராட். மகனாகவே இருந்தாலும் விதி முறைகளை மீறாமல் தான் ரொம்ப ஸ்ட்ரிட்டான  அப்பா என நிருபித்திருக்கிறார் கிறிஸ்ட் பிராட்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x