தொல்லைத் தருவதில் இந்தியா 9வது இடம்..! அதிர்ச்சி ரிப்போர்ட்..

நாம் அனைவருக்குமே மிகப்பெரிய தொல்லையாக இருப்பது இந்த ஸ்பேம் அழைப்புகள் தான். தேவையில்லாத நேரத்தில் பல்வேறு வங்கிகள், நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
இப்படி மக்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளின் அடிப்படையில் உலகளாவிய தரவரிசைப் பட்டியலை ட்ரூகாலர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா 9வது இடம் பிடித்துள்ளது. இதில் முதலிடத்தில் ஸ்பெயின் உள்ளது. சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்தியாவில் 34% ஸ்பேம் அழைப்புகள் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு கொரோனா பரவலின் காரணமாக டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் முடங்கியதும் முக்கிய காரணம் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.