25 கோடி பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்

கொரோனா வைரஸ் பொருளாதாரத்தை செயலிழக்கச் செய்துள்ளதால் உலக பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 25 கோடி பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் கணித்துள்ளார்.
கடந்த 2019 டிசம்பரில் கிளம்பிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்களை பறித்ததும் இல்லாமல் பொருளாதாரத்தையும் இதுவரை இல்லாத அளவு புரட்டிப்போட்டுவிட்டது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து இல்லாததால் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குகள் விதிக்கப்படுகின்றன. இதனால் சிறிய நிறுவனங்களில் இருந்து பெரிய நிறுவனங்கள் வரை நஷ்டமடைகின்றன. வீட்டில் இருந்து வேலை பார்க்க கூடிய துறைகளில் கூட பலர் பணி நீக்கம், சம்பளம் பிடித்தம் என தொடர்ந்து வருகிறது.
இதுபோன்ற பிரச்னைகள் இன்னும் தீவிரமாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பிராட் ஸ்மித் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டுக்குள் அதிர்ச்சியூட்டும் வகையில் 25 கோடி பேர் வேலையிழப்பார்கள். அமெரிக்காவில் மட்டுமே 3.5 சதவீதத்திலிருந்து 15.8 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உயர இருக்கிறது. கிட்டத்தட்ட 2.1 கோடி பேர் வேலையிழக்கவுள்ளார்கள். இதேபோன்ற சவால்களை பல நாடுகளும் எதிர்கொள்ளும் என கூறியுள்ளார்