கெட்டுப்போன உணவால் 700 பேர் மருத்துவமனையில்… ஒரு குழந்தை பலி

ஜோர்தான் நாட்டின் தலைநகர் அம்மானின் வடமேற்கு பகுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட குழந்தை பலியானது. 700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மான் மாவட்டம் இன் அல் பாஷா பகுதியில்அமைந்துள்ள உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு உணவு சாப்பிட்ட சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். சிலருக்கு லேசான காய்ச்சல் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அந்த உணவகத்தில் இறைச்சிகளை குளிரூட்டும் அறை சரிவர செயல்படாததும், அதனால் உணவுப் பொருள்களில் ஏராளமான கிருமிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும், உணவகத்துக்கு வெளியே போதுமான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, உணவகம் மூடப்பட்டது. பாதிக்கப்பட்டோருக்கான முழு மருத்துவ செலவுகளை செய்ய, உணவக நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.