நோயை மறைத்து மாணவியைச் சீரழித்த வாலிபர் – குமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது மாணவியைக் காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்று எய்ட்ஸ் நோயாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (22) ஆட்டோ டிரைவரரான இவர் 11ஆம் வகுப்பு மாணவியை உருகி உருகி காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தைகள் கூறி நடித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய 17வயது சிறுமி, ரதீஸ் உடன் சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு ரஷித் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே மகளைக் காணாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ டிரைவரையும் அவர் அழைத்துச் சென்ற மாணவியையும் தேடிவந்தார்கள். இந்த நிலையில் நாகர்கோவிலில் அவர்கள் இருவரும் நின்று கொண்டிருந்தபோது போலீசார் ஆட்டோ டிரைவர் ரதீசை பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட ரதீஸிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் எய்ட்ஸ் நோயாளியென அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ரதீஸ் மீது கடத்தல் மற்றும் போக்ஸோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பெண் குழந்தைகளிடம் ஹீரோயிரசம் செய்யும் இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை தொலைப்பதுடன், பெண் குழந்தைகளின் வாழ்க்கையையும் சேர்த்தே நாசம் செய்கிறார்கள்.
சினிமா படங்களில் பள்ளி குழந்தைகள காதலிப்பது போன்ற சீன்களால் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஒரு சிறுமி காதலனுடன் சென்றதற்கு களவாணி திரைப்படத்தைக் காரணமாகக் கூறினார் என்பது நினைவிருக்கலாம். திரைப்படங்களில் வரும் காட்சிகளை அப்படியே உண்மைபோல் நம்பி மோசமான நிலை ஏற்படுகிறது. டீன் ஏஜ் பெண்களை நிச்சயம் இன்றைய சூழலில் மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்பதற்கு கன்னியாகுமரி சம்பவம் உதாரணம் ஆகும்.