பிரதமர்தான் கேட்கல; நீங்க கேளுங்க! ப.சிதம்பரம் எடப்பாடிக்கு ஆலோசனை

ஊரடங்கு காலத்தில் வழங்க வேண்டிய நிவாரணங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி சிதம்பரம் இன்று (ஏப்ரல் 11) தனது ட்விட்டர் பக்கத்தில், 

ஊரடங்கை இரு வாரங்களுக்கு 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் தலா ரூ. 5,000 தந்தால் மொத்தச் செலவு ரூ 65,000 கோடி. இது நம்மால் முடியும், இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். என் பணிவான யோசனையை நம் முதலமைச்சர்களிடம் நான் தெரிவித்திருக்கிறேன் பிரதமரின் முடிவு என்னவென்று பார்க்கலாம். @EPSTamilNadu @VNarayanasami

என்று தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x