தமிழக ஊரடங்கு? ‘பிரதமர் சொல்லுக்காக காத்திருக்கிறோம்…’

ஊரடங்கை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க பிரதமரிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருப்பதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது. மாநில முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனையில், பெரும்பாலானோர் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைத்தனர். அதோடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.

இந்த சூழ்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்ரல் 11) மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே, ஊரடங்கை நீட்டித்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டம் 6.15 மணிக்கு நிறைவடைந்தது.

இதுதொடர்பாக பேட்டியளித்த தலைமைச் செயலாளர் சண்முகம், “இன்று காலை 11 மணி முதல் பிரதமர் பல்வேறு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நமது மாநிலத்திலும் ஊரடங்கை 2 வாரத்துக்காவது நீட்டிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். அனைத்து மாநில முதல்வர்களின் கருத்துகளை கேட்ட பிறகு பிரதமரும் சில அறிவுரைகளை வழங்கினார்.

ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என மூன்று வகையாக பிரிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று 8 மணிக்கு பிரதமர் உரையாற்ற இருக்கிறார்.” என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x