நம் அனைவருக்கும் தேவையானது மகிழ்ச்சி.. அது எங்கே உள்ளது??
“உலகிலேயே மகிழ்ச்சியான ஒரு மனிதன் இருந்தான் என்றால் அவன் தன் தொழிலுக்காக ஒரு படகை உருவாக்கிக்
கொண்டிருப்பான். படகை கட்டுகையில் தானே உருவாக்கிய சிம்பனியை பாடிக்கொண்டிருப்பான். தன் மகனுக்கு படகை எப்படி கட்டுவது என்பதை கற்றுக் கொடுத்துக்கொண்டிருப்பான். மாலையில் தன் தோட்டத்தில் தான் நட்ட டேலியா மலர்களை பார்த்து மனம் மகிழ்வான். கோபி பாலைவனத்தில் டைனசார் முட்டைகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவன் கனவாக இருக்கும். மகிழ்ச்சி என்பதை பிடிக்கவேண்டிய பொருளாக அவன் கருதமாட்டான். அதை அடையவேண்டிய குறிக்கோளாக கருதமாட்டான். படகை கட்டும் கடினமான தொழிலில், நாளின் 24 மணிநேர நெருக்கடிக்குள் தன் வாழ்க்கையை வாழும் விதத்திலேயே அவன் மகிழ்ச்சியாக இருப்பான்”
— ஆஸ்திரேலிய மனோதத்துவ நிபுணர் பேரன் உல்ஃப்.
சுற்றுப்பயணம் பற்றிய விவாதத்தில் இதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது..
மகிழ்ச்சி ஸ்விட்சர்லாந்தில் இல்லை, மெக்சிகோவில் இல்லை, டிஸ்னிலாண்டில் இல்லை, வேகஸில் இல்லை…
நம் அன்றாட வாழ்க்கையை நாம் வாழும் விதத்தில் உள்ளது மகிழ்ச்சி.
(நியாண்டர் செல்வனின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து)