தாயையும், மகளையும் காதலித்த இளைஞன்; காதலனுக்காக தாய் செய்த விபரீத காரியம்…

உத்திரப்பிரதேசத்தின் பிரேலி மாவட்டத்தில் வசிப்பவர் உஸ்மா( வயது 19). இவர் கெளஸர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞனுக்கு காதலியின் அம்மாவின் மீதும் ஆசை உண்டானது. உஸ்மாவின் அம்மாவையும் காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். தாய், மகள் இருவரிடமும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பழகி வந்துள்ளான் அந்த கயவன்.
இந்நிலையில், தாயார் முகீராவுக்கு, தன் காதலன், தன் மகளை காதலிக்கும் விஷயம் தெரியவந்துள்ளது. காதலை விட்டுவிடும்படியும், தன்னை மட்டுமே காதலிக்கும்படியும் கூறி அழுதுள்ளார். ஆனால், ‘உன் மகளுக்கு தெரிந்தால், நம் காதலை பிரித்துவிடுவாள்’ என்று அந்த இளைஞன் கூறவே, மகளை தீர்த்துக்கட்ட அந்த தாயார் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, முகீராவும் அவள் கள்ளக்காதலனும் சேர்ந்து, மகளின் உயிரைப் பறிக்க திட்டமிட்னர்.
அதன்படி, நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த அப்பாவி மகள் உஸ்மாவின் கழுத்தில், தன் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெரித்துள்ளாள் முகீரா. இதற்கு காதலனும் உடந்தையாக இருந்துள்ளான். உயிர்பிரிந்தவுடன் இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அண்டை வீட்டாருக்கு உண்மை தெரியாமல் இருப்பதற்காக, வீட்டுக்கு திருடன் வந்ததாகவும், அவர்கள் தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டு, தன்னையும் தாக்கிவிட்டு சென்றதாக தாய் முகீரா போலீசில் புகார் அளித்தார்.
ஆனால், புகார் அளித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் தாய் முகீராவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முகீரா தன் மகளை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து முகீராவையும் அவரின் கள்ளகாதலன் கௌசரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்