நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பைக் கேட்டு கதறி அழுது மயங்கி விழுந்த காம கொடூர தந்தை!!

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு சேலம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். கூலி தொழிலாளியான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு, தன்னுடைய 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜேம்ஸின் மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில், ஜேம்ஸ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், குற்றவாளி ஜேம்ஸ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 75 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனது தண்டனையை கேட்ட ஜேம்ஸ் நீதிமன்றத்திலேயே கதறி அழுது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் நீதிமன்ற ஊழியர்களும் வெளியே வந்ததால் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.