மூன்று பெண்களை ஏமாற்றியவருக்கு தர்ம அடி கொடுத்த உறவினர்கள்!

தெலுங்கானாவில் அடுத்ததடுத்து 3 பெண்களை ஏமாற்றிய நபருக்கு அவரது மனைவியின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்ததுடன், தரதரவென இழுத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கரீம் நகர் மாவட்டம் அருகே சம்பத் என்பவர், மனைவியை பிறந்த வீட்டிற்கு விரட்டிவிட்டு வேறு பெண்ணுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரகசிய இருப்பிடத்தை அறிந்த மனைவியின் உறவினர்கள் அங்கு சென்று சம்பத்தை அடித்து, உதைத்து, கயிற்றால் கட்டி இழுத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத்தொடர்ந்து காவல்துறை விசாரணையில் சம்பத் இதுபோன்று மேலும் 2 பெண்களை ரகசியமாக திருமணம் செய்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதிலும் குறிப்பாக வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைத்தே சம்பத் இதுபோன்ற மோசடி செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக 3 பெண்களும் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற ஒழுங்கற்ற செயலுக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x