“மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படலையா”?- கமல்ஹாசன் டிவிட்..

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகள் ஆக.18 முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ளதை கண்டித்து பிரபலஸ் நடிகர் கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில், “காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது.
மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? — Kamal Haasan (@ikamalhaasan)