“இந்திய அணி கேப்டன் விராட் கோலியை பாராட்டியது ஒரு தப்பா?” ஆவேசப்படும் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர்!
![](https://thambattam.com/storage/2020/09/virat-kohli-rohit-sharma-shoaib-akhtar-e1599202117766-780x421.jpg)
விராட் கோலி, ரோஹித் சர்மாவைப் பாராட்டியதில் என்ன தவறு உள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான், இந்திய வீரர்களை ஒப்பிட்டு பேசினார் சோயிப் அக்தர். இதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து அவர் கூறுகையில், “இந்திய வீரர்களையும், விராட் கோலியையும் நான் ஏன் பாராட்டக் கூடாது? பாகிஸ்தானிலோ அல்லது உலகிலோ கோலிக்கு நிகரான வீரர் யாராவது உண்டா? எதற்காக மக்கள் ஆவேசப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. புள்ளிவிவரங்களை முதலில் பார்த்துவிட்டு பிறகு என்னை விமர்சிக்க வேண்டும்.
70 சர்வதேச சதங்களை அடித்துள்ளார் கோலி. தற்போது வேறு எந்த வீரர் இத்தனை சதங்களை அடித்துள்ளார்? இந்தியாவுக்காகப் பல தொடர்களை வென்று கொடுத்துள்ளார் கோலி. பிறகு ஏன் அவரை நான் பாராட்டக்கூடாது? இது மிகவும் புதிரானது. உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் கோலி தான் என்பதை நம்மால் நன்குப் புரிந்துகொள்ள முடிகிறது. அவரும், ரோஹித் சர்மாவும் எப்போதும் நன்றாக விளையாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.