ஆஸிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தி திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து…

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகின்றன. டி20 தொடர் செளதாம்ப்டனிலும் ஒருநாள் தொடர் மான்செஸ்டரிலும் நடைபெறவுள்ளன. டி20 தொடர் நேற்று முதல் தொடங்கியது. செப்டம்பர் 4, 6, 8 தேதிகளில் டி20 தொடரும் செப்டம்பர் 11, 13, 16 தேதிகளில் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடர் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

பட்லர் 44, மலான் 66 ரன்கள் எடுத்தார்கள்.

பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி கடைசியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வார்னர் 58, ஃபிஞ்ச் 46 ரன்கள் எடுத்தார்கள். கடைசி ஓவரில் ஆஸி. அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x