“நீட் தேர்வை ரத்து செய்”-தமிழக அரசு கோரிக்கை…செங்கோட்டையன் பேட்டி!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் (NEET) வரும் செப்டம்பர் 13-ம் தேதியும், பொறியியல் படிப்புகளுக்காக ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.
இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், 10-ம் வகுப்புத் தனித்தேர்வர்கள் 27-ம் தேதி வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கையாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கொரோனா நோய்த் தொற்றி பரவுவது குறைந்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்க முடியும் என்றார்.