இறுதி செமஸ்டர் தேர்வுக்கான தேதியை அறிவித்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம்!

இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதல்படி தேர்வுகளை நடத்த,கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலை வெளியிட்ட அறிக்கையில், “வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ஆன்லைனில் மாதிரி தேர்வு நடக்கும். கணினி, லேப்டாப் ஆகியவற்றில்,கேமரா, மைக்ரோபோன் வசதியுடன் இணையதள வசதி இருக்க வேண்டும். Multiple choice questions அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.