“தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்!” அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

தமிழகத்தில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செல்லிடப்பேசியில் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், வட்ட அளவில் அன்றைய நாள்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கவில்லை என்றும், கொரோனா தொற்று குறைந்த பிறகே அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.