நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வைகோ வலியுறுத்தல்

நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக – கேரள எல்லையில் அமைந்திருக்கும் மதிகெட்டான் சோலை வனப்பகுதியை, கேரள அரசு கடந்த 2003ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவித்தது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசியப் பூங்காவின் கிழக்கு எல்லையானது தமிழக -கேரள எல்லையாகவும் உள்ளது.

தற்போது இந்தப் பூங்காவை மேலும் பாதுகாக்கும் நோக்கத்தில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கக் கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்தை ஏற்று, மத்திய சுற்றுச்சூழல் துறை பூங்காவின் கிழக்கு எல்லையைத் தவிா்த்து 1 கிமீ தொலைவிற்கான மற்ற பகுதிகள் அனைத்தையும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்துள்ளது.

இது தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பா் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்காகப் பெற வேண்டிய அனுமதிகளை எளிதில் பெறுவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது. இது வன்மையானக் கண்டனத்துக்கு உரியது.

மேற்குத் தொடா்ச்சி மலையின் முக்கியத்துவம் கருதியும், தமிழ்நாடு போராடிப் பெற்ற முல்லைப் பெரியாறு அணையின் மீதான உரிமை கருதியும் தமிழக அரசு இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x