“இதையும் ‘கடவுளின் செயல்’ என விட்டுவிடப் போகிறதா மத்திய அரசு?” கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி!
![](https://thambattam.com/storage/2020/07/Rahul-Gandhi-talks-meeting-Delhi-Feb4-2020-afp.jpg)
இந்திய எல்லையைச் சீனா ஆக்கிரமிப்பதையும் கடவுளின் செயல் என விட்டுவிடப் போகிறீர்களா என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தடுப்பு, பொருளாதார சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
![](https://thambattam.com/storage/2020/09/001-10-300x119.jpg)
அந்த வகையில் இந்தியா, சீனா எல்லைப்பிரச்சனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, “சீன அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலத்தை திரும்பப்பெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது அல்லது இதுவும் கடவுளின் செயல் என விட்டுவிடப் போகிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.