பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை விடுத்த சவாலுக்கு ‘ஓகே’ சொன்ன திமுக எம்.பி.செந்தில்குமார்!!
![](https://thambattam.com/storage/2020/09/005-3-780x470.jpg)
தன்னுடன் திமுகவினர் விவாதிக்க தயாரா என பாஜகவின் மாநில துணைத்தலைவர்களுள் ஒருவரான அண்ணாமலை விடுத்த சவாலை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் செந்தில்குமார் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவருமான அண்ணாமலை, அண்மையில் திமுக குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் திமுகவை சேர்ந்த யாரேனும் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்றும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் சவால் விட்டிருந்தார்.
![](https://thambattam.com/storage/2020/09/004-6-300x254.jpg)
இந்த சவாலை உடனடியாக ஏற்பதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற திமுக உறுப்பினர் செந்தில்குமார், இந்த விவாதத்தை நேரலை நிகழ்ச்சியாக ஏதேனும் ஒரு தமிழக ஊடகம் ஏற்பாடு செய்தால், அதனை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
![](https://thambattam.com/storage/2020/09/006-4-300x72.jpg)
சவாலை ஏற்ற நாடாளுமன்ற திமுக உறுப்பினர் செந்தில்குமாரோடு தானும் இந்த விவாதம் செய்ய தயார் என்று அண்ணாமலை கூறியிருப்பதால் தற்போது இந்த சவால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.