தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது!

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா, கொரானாவுக்கு மத்தியிலும் கொண்டாடப்பட உள்ளது. வருடந்தோறும் சுதந்திர தின விழாவில் குற்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்தோருக்கு விருது வழங்கப்படும்.
அதன்படி, இந்தாண்டு குற்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்ததற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த 6 தமிழக காவல் அதிகாரிகளுக்கு குற்ற வழக்குகளில் சிறப்பான முறையில் விசாரித்ததற்காக மத்திய அரசின் விருது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளில் 5 மகளிர் காவல் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.