“நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 85%-90% மாணவர்கள் பங்கேற்றனர்!” மத்திய கல்வி அமைச்சர் தகவல்!
![](https://thambattam.com/storage/2020/07/exam-780x470.jpg)
நீட் தேர்வில் 85%-90% மாணவர்கள் பங்கேற்றதாகவும், இது இளைஞர்களின் உறுதியான மனநிலையை பிரதிபலிப்பதாகவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்பு இளநிலை சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. வழக்கம் போல இந்தாணடும் பல்வேறு குழறுபடிகளுடன் நீட் தேர்வு நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
![](https://thambattam.com/storage/2020/09/001-12-300x131.jpg)
இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் 85-90% மாணவர்கள் பங்கேற்றதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்காக சரியான ஏற்பாடுகள் செய்து ஒத்துழைப்பு தந்த அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் நன்றி. நீட் தேர்வில் இவ்வளவு சதவீதம் மாணவர்கள் பங்கேற்று இருப்பது இளைஞர்களின் உறுதியையும், மன நிலையையும் பிரதிபலிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.