“உண்மையை எடுத்துரைப்பது எவ்வாறு நீதித்துறையை சிறுமைப்படுத்தும்?” ஜவாஹிருல்லா கேள்வி!!

ஓர் எதார்த்த உண்மையை நடிகர் சூர்யா எடுத்துரைத்திருப்பது எவ்வாறு நீதித்துறையின் அதிகாரத்தை சிறுமைப்படுத்துவதாக கருத இயலும்? என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மத்திய மற்றும் மாநில அரசு, நீதித்துறை என எதையும் விட்டு வைக்காமல் வறுத்தத்தெடுத்தார். சூர்யாவின் இதுபோன்ற கருத்துக்கள் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அதலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்தைச் சிதைக்கும் வகையில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கட்சி மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.!
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹருல்லா, ” ஓர் எதார்த்த உண்மையை நடிகர் சூர்யா எடுத்துரைத்திருப்பது எவ்வாறு நீதித்துறையின் அதிகாரத்தை சிறுமைப்படுத்துவதாக கருத இயலும்? அரசமைப்புச் சட்டத்தின் 19ம் பிரிவு கருத்துச் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக பிரகடனம் செய்கிறது.
கொரோனா காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொலியில் நடைபெற்று வரும் சூழலில் நீட் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளது நியாயமா..? என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளது நீதிமன்ற அவமதிப்பாக சித்திரிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டால் அது அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகவே அமையும்” என்று அவர் கூறி சூர்யாவுக்கு ஆதரவாக காலமிறங்கியுள்ளார்.