“கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்” நிறுவனம் அழைக்கும் சிவில் பொறியாளர்!!!

கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.47 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கட்டிட பொறியாளர்
கல்வித் தகுதி : பி.இ துறையில் சிவில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.47,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinshipyard.com என்ற இணையதளம் மூலம் 25.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : மின்னணு ஊடகங்கள் மூலம் நேர்காணல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி, பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) / பெஞ்ச்மார்க் ஊனமுற்றோர் (பி.வி.பி.டி) நபர்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.200.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cochinshipyard.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.