தாயின் சேலையில் ஊஞ்சல் விளையாடிய குழந்தை பரிதாபமாக பலியான அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் குலாலர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் தனது மனைவி, மகள் அக்ஷயா (13) என குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
7ஆம் வகுப்பு படித்து வந்த அக்ஷயா வீட்டு மாடியில் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சேலையை சுற்றிவிட்டுக்கொண்டு ஊஞ்சல் ஆடியதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக திடீரென சேலை சிறுமியின் கழுத்தில் இறுக்கியதில், மூச்சு திணறி ஏற்பட்டு அக்ஷயா துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அலறி துடித்தனர்.
குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று அக்ஷயாவின் உடலை கீழே இறக்கினர். பின்னர் போலீசார் அங்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சேலை இறுகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.