திருச்சி பாரதிதாசன் பல்கலை, கல்லூரி மாணவர்களுக்கான இளநிலை, முதுநிலை தேர்வு வரும், 21 முதல் ஆன்லைன் மூலம் துவக்கம்!!!

கரூர்:
திருச்சி பாரதிதாசன் பல்கலை, கல்லூரி மாணவர்களுக்கான இளநிலை, முதுநிலை தேர்வு வரும், 21 முதல் ஆன்லைன் மூலம் துவங்க உள்ளது.
இதுகுறித்து, தேர்வு நெறியாளர் சீனிவாச ராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு உயர்கல்வி துறை மற்றும் துணைவேந்தர் அறிவுறுத்தல்படி, 2020 ஏப்ரல் இறுதி பருவ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு எழுத்து தேர்வு, ஆன்லைன் மூலம் வரும், 21 முதல், 30 வரை நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான கால அட்டணை மற்றும் தேர்வு நடத்தப்படும் முறை குறித்து, இணைய தளத்தில் விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களின் மொபைல் போன் எண் மற்றும் இ-மெயில் முகவரியை, அந்தந்த கல்லூரி முதல்வர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.