குற்றாலத்தில் கொட்டுது தண்ணீர்…. குளிக்கத்தான் ஆளில்லை…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக யாருக்கும் அனுமதி இல்லாததால் அருவி வெறிச்சோடி கிடக்கிறது.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் காலம் ஆகும். இந்த காலகட்டங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஆர்ப்பரித்து கொட்டும். சுற்றுலா பயணிகள் வருகை என்பதும் அதிகமாகவே காணப்படும்.
அதே போன்று இந்த ஆண்டும் சீசன் தாமதமாக துவங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் அதிகாலை முதலே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட துவங்கியது.
தற்போது தமிழக அரசு அறிவித்தபடி சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் குற்றால அருவி, கரை வெறிச்சோடி காணப்படுகிறது