ஆண் குழந்தை ஆசையால், கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்த கணவர்!!

உத்தரப்பிரதேசத்தில் ஆண் குழந்தை வேண்டும் என்ற பேரார்வத்தால் கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கணவர் கிழித்து பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் புதான் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரது மனைவி கர்ப்பமடைந்துள்ளார். தற்போது அந்த பெண் 6 மாதங்கள் கர்ப்பமாக இருந்த நிலையில், தன் மனைவியின் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பார்ப்பதற்காக கூர்மையான ஆயுதத்தை வைத்து மனைவியின் வயிற்றைக் கிழித்துப் பார்த்துள்ளார்.
அதனை அடுத்து, அந்த பெண்ணுக்கு மிகுந்த ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்து போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பெண்ணின் வயிற்றை கிழித்த காரணம் குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கையில், “ராகேஷ் எதற்காக இப்படி செய்தார் என்று தெரியவில்லை. இதற்கு முன்னர் பெண் குழந்தைகள் இருந்த நிலையில் தற்போது ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்து இவ்வாறு செய்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.