பொறியியல் இறுதி ஆண்டு பருவத்தேர்வு கட்டாயம் – அண்ணா பல்கலைக் கழகம்!!!

அண்ணா பல்கலைக் கழகத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடக்கும் என்றும், இதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு பருவத் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ள நிலையில் விரைவில் தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த இறுதிப் பருவத் தேர்வானது ஆன்லைன் அல்லது நேரடியாக நடத்தப்பட உள்ளது. எனவே மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக இருங்கள் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.