மூன்று மணிநேரம் போராடி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அலெக்சாண்டர் வெர்வ்….

இந்த வருட யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் டொமினிக் தீம் – அலெக்சாண்டர் வெர்வ் ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள்.
3-ம் நிலை வீரர் மெட்வெடேவை 6-2, 7-6(7), 7-6(5) என நேர் செட்களில் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் டொமினிக் தீம். இந்த ஆட்டம் 3 மணி நேரம் நடைபெற்றது.

அலெக்சாண்டர் வெர்வ் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பப்லோவை 3-6, 2-6, 6-3, 6-4, 6-3 என வீழ்த்தியுள்ளார். முதல் இரு செட்களை இழந்த பிறகும் அடுத்த மூன்று செட்களிலும் நம்பிக்கையுடன் விளையாடி அரையிறுதி ஆட்டத்தில் வென்றுள்ளார்.

பல வீரர்கள் நம்பிக்கையை கைவிட்டிருப்பார்கள். ஆனால் நான் தொடர்ந்து போராடினேன். எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்றேன். கடைசியில் இந்த ஆட்டத்தில் நான் தான் வெற்றி பெற்றுள்ளேன். இது மிகவும் வித்தியாசமான அனுபவம் என்று கூறியுள்ளார் அலெக்சாண்டர் வெர்வ்.