“விருப்பம் இருந்தால், மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்!” புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
அக்டோபர் 5ம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுபாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, செப்டம்பர் 21 முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, 9 மற்றும் 11 ஆம் மாணவர்களுக்கு வகுப்பு தொடங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.