முக்கிய சில நிபந்தனைகளுடன் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதி சென்ற வருட தேர்வுகள் அனைத்திலும் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்து அடுத்த கல்வி ஆண்டிற்குள் மாணவர்களை தயார்ப்படுத்தி வருகிறது.
அதற்கான ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தொலைகாட்சி வகுப்புகள் நேரில் மாணவர்கள் கல்வி கற்பது போன்ற அனுபவத்தை தரவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. இதனால் தமிழகத்தில் வருகின்ற அக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு கொள்ளலாம் என அரசு தளர்வுகள் அறிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 1 முதல் 10,11, மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்லலாம்.
ஆனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரிந்து பள்ளிக்கு செல்லும் நாள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் குழு திங்கள், புதன் மற்றும் வெள்ளி நாட்களில் ஒரு குழுவும், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஒரு குழுவும் செல்லலாம். அதே போல் ஆசிரியர்கள் குழு ரொடேஷனில் திங்கள், செவ்வாய் முதல் குழு, புதன், வியாழன் இரண்டாம் குழு, வெள்ளி, சனிக்கிழமை முதல் குழு என வர வேண்டும். சமூக விலகலை பயன்படுத்தி மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்தை வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசின் உத்தரவின் படி தமிழக அரசு வழிமுறைப்படுத்தியுள்ளது.