Trending

சாத்தான்குளம் சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற அனுமதி பெற்று சி.பி.ஐ விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவல் துறையினர் தேவையில்லாமல் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும்.  நீதிமன்ற அனுமதி பெற்று வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும்” என அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x